முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் தொழில் வாய்ப்பு செயலாளருமான கௌரவ ஏ.ஏல். தவம் அவர்களின் முயற்சியினால்நேற்று (03)  அக்கரைப்பற்றில் அரச மருந்தாக்கள் கூட்டுதாபனத்தின் “ஒசுசல”, கிளை மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக சுகாதார சுதேச அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன,  பிரதி அமைச்சர் பைசால் காசிம்,  பாராளுமன்ற உருப்பினர் கௌரவ நாசீர்,  மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லாஹ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சகலவிதமான மருந்துப்பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நீண்டகாலமாக இப்பிரதேச மக்களின் தேவையாக இருந்து வந்த ஒசுசல கிளை திறந்து வைத்தமைக்கு  அப்பிரதேச மக்கள் கெளரவ தவம் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM