Web
Analytics
அக்குறணையில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு தொடர்பில் கலந்துரையாடல் - Sri Lanka Muslim Congress

மழை காலங்களில் அக்குறணை ஆறு நிரம்பி வழிவதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் கலந்துரையாடலொன்று நேற்று (7) அக்குறணை பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர்மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அடுத்தவாரம் பாரளுமன்றத்தில் மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசன திணைக்களம், சுற்றாடல் பாதுகாப்பு திணைக்களம், UDA, RDA, SLRDC உள்ளிட்ட திணைக்களங்களுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர்கள் இதன்போது தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM