அனைத்து சமூக, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட மக்களும் இன சௌஜன்யத்தோடு வாழ்ந்த பாரம் பாரியம் ஏறாவூருக்கு உண்டு.இத்தகைய சிறப்பு மிக்க ஏறாவூரை அடுத்த சந்ததிக்கு அழகான நகரமாக நாம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிசாஹிர் மௌலான தெரிவித்தார்.

மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரப்பகுதியை அகலமாக்கும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விசேட கலந்தாலோசனைக் கூட்டம் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செயவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அலிசாஹிர் மௌலானா, அனைத்து சமூக மக்களின் சந்தைபடுத்தல் அங்காடியாகத்தான் ஏறாவூர் நகரம் இருந்து வந்திருக்கிறது. கல்வி, பொருளாதார அபிவிருத்தி அத்தனையும் எல்லா மக்களுக்கு அனுகூலமாக அமையக்கூடியதாக நன்கு திட்டமிடப்பட வேண்டும். அது இயற்கைச் சூழலுக்கும் இசைந்து கொடுக்கக்கூடியதாக அமைக்க வேண்டும்.

நகரத்தை உடைத்து அகலமாக்குவதால் வர்த்தகர்களுக்கும் குடியிருப்பாலர்களுக்கும் காணி சொந்தக்கரர்களுக்கும் ஏற்படக்கூடிய இழப்புக்களையும் அசௌகரியங்களையும் மனிதாபிமானத்துடன் அணுகி இந்த அபிவிருத்துகளை எல்லோரினதும் பூரண ஒத்துழைப்புடனும் செய்ய வேண்டும். இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதால் கடை மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டங்களுக்கும் இழப்பீடுகள் இல்லை அபிவிருத்திக்குத் தடையாக நீதிமன்றம் சென்றாலும் அது கைகூடாத நிலைமைகள் உள்ளன.

நடுத்தெருவிலிருந்து இருமருங்கும் 11.5 மீற்றர் உடையதாக ஏறாவூர் நகரக் கடைத் தெரு அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலை அகலமாக்கும் வேலைத் திட்டத்துக்காக நகர அபிவிருத்தி நீர் வழங்கல்அமைச்சு 1000மில்லியனை ஒதுக்கீடு செய்து உள்ளது.

வீதி விபத்துகளற்ற இயற்கை எழில் நிறைந்த சௌகரியமான பாதுகாப்பும் சுகாதாரமும் கொண்ட நகரத்தை அமைப்பதற்கு வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் என அனைத்து தரப்பும் ஆதரிக்க வேண்டும் எனவும் 30 வருட யுத்த காட்சிகளின் சாட்சியாக இந்த நகரத்தை தொடர்ந்து வைத்து இருக்க முடியா தென்றும் அவர் கூறினார்.

இக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை சுகாதார அமைச்சருமான எம், எஸ் சுபைர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைமை பொறியாளர் ரீ, பத்மா ராஜா உட்பட பிரதான கடைத்தெரு வர்த்தகர்கள் ,குடியிருப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் ஏறாவூர் நகர சபை மற்றும் பிரதேச செயலாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM