சப்னி அஹமட்-

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரத்தினைகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு கிழக்கு மாகாணம் முழுவதும்நடைமுறைப்படுத்திவருகின்றது. அந்தவகையில் அட்டாளைச்சேனைசுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாடில்அட்டாளைச்சேனை பிரதேசம் முழுவதும் டெங்கு நோயினைகட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று (26) அட்டாளைச்சேனைபிரதான வீதியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட்நஸீரின் பங்குபற்றதலுடன் விசேட சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதான வீதிகளில் உள்ள வடிகான்களும் அதனைஅண்டிய பிரதேசங்களும் அசுத்தமைடந்து காணப்படுவதுடன், டெங்குஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் இதனை தடுபதற்காகவேஇத்திட்டம் மேற்கொள்ளப்பட்டடாதா கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சர் தெரிவித்தார்.

வடிகானுள் வீட்டுக்கழிவுகள், கடைக்கழிவுகளை செலுத்துதல் தங்களதுஎல்லைக்குள் வைத்துக்கொள்ளுமாறும்,திண்மக்கழிவுப்பொருட்களையும் குப்பைகளையும் பிரதேச சபை மூலம்அகற்றுவதற்குரிய ஏதுவான இடத்தில் வைக்குமாறும், கட்டிடநிமாணத்திற்கு பாவிக்க கூடிய கல், மண்ணை வீதியோரங்களிலையோ, வடிகான்களிலையோ இடமால் தங்களது சொந்த இடங்களில்வைக்குமாறும், வடிகானுள் நீர்களை ஓடவிடக்கூடியவாறு வைக்குமாறும்,தங்களது வீடு, கடை, வெற்று வளவு ஆகியவற்றை சுத்தமாக வைக்குமாறுஅறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வெற்றுவளவுகளுல் டெங்கு நோய் அச்சமுள்ள இடங்களில் சிவப்புஎச்சரிக்கை படிவம் இடப்பட்டதுடன் வடிகான்கள், வீதிப்பிரச்சினைகள்சில அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டன.

இதன் போது,  கௌரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாவட்ட நீதிபதி அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ்,  சத்திர சிகிச்சையாளர் வைத்தியர்  மனாப் ஷரீப், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல். அலாவுதீன்,  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்ஜே. அதிசயராஜ்,  அட்டளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர்எம்.ஐ.எம். பாயிஸ், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் ஏ.எல்.கமுர்தீன் ஆகியோருடன், அரச உத்தியோகத்தர்கள், கடைஉரிமையாளர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள்கலந்துகொண்டு துப்பரவு பணியில் ஈடுப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM