Web
Analytics
அட்டாளைச்சேனை அல்-ஹூதா பாலர் பாடசாலையின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு; பிரதம அதிதியாக நசீர் MP  - Sri Lanka Muslim Congress

அட்டாளைச்சேனை அல் ஹுதா பாலர் பாடசாலையினால் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) அட்டாளைச்சேனை கடற்கரையில்,
ஏஎம்எம். நௌஷாட் அவர்களின் தலைமையில் சிறுவர்களுக்கான சிறுவர் நிகழ்வுகள் நடைபெற்றது.

இச் சிறுவர் நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை அமைச்சரும் பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் கௌரவ பாராளுமன்றம் உறுப்பினர் அல் ஹாஜ் ஏ.எல். முஹம்மட் நசீர் அவர்களும் முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன், ஊடகவியலாளர் பஹத் A மஜீத், அதிபர் றியாஸ் உட்பட பலர் கலந்து சிறப்பித்த அதே நேரம் சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டம் இன்னும் பல போட்டி நிகழ்வுகள் மிகவும் அழகாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு கௌரவ பாராளுமன்றம் உறுப்பினர் ஏஎல் முஹம்மட் நசீர் அவர்களினால் பெருமதியிலான பரிசில்களும் வழங்கப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM