நாட்டில் ஏற்பட்டுள்ள அனத்தம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் விஷேட அமர்வு இன்று (02) காலை 9.30 மணிக்கு சபை தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் கூடியது.

 
கிழக்கு மாகாண சபையின் விஷேட அமர்வின் போது முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ஆகியோரின் கோரிக்கைக்கமைய ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த அனர்த்தத்தில் சிக்கியுள்ள அனைத்து மக்களுக்கும் கிழக்கு மாகாண சபையின் மூலம் உதவிகள் செய்யவேண்டும் என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கருத்துத் தெரிவிக்கையில்:
 
இன்று அனர்த்தத்தில் காலி, களுத்துறை, கேகால,ரத்னபுர போன்ற மாவட்டங்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணமாக சில கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்தமையே எனலாம்.
 
இந்த அனர்த்ததின் போது சுமாராக 203 உயிரிழப்புக்களும் 100க்கு மேற்பட்டோர் காணாமலும் போயுள்ளதுடன் 107486 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 65000 பேர் மக்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் பதியப்பட்டுள்ளன.
 
குறித்த அனர்த்ததில் அரசாங்கத்தின் இரண்டு வானூர்திகள் உட்பட அரச சொத்துக்கள் சிலவும் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இலங்கையில் ஏற்பட்ட சுனாமி போன்ற பெரும் அழிவுக்கு அடுத்த அனர்த்தமாக இதனை நாம்பார்க்கவேண்டிய நிலைக்கு பாதிப்புக்கள் உள்ளாகியிருப்பதனை நாம் நோக்க வேண்டும்.
 
எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மக்கள் என்ற உணர்வுடன் சாதி பேதங்கள் பார்க்காமல் மக்களுக்கு எதனை செய்ய முடியுமோ அதனைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதுவே இந்த மாகாண சபையின் அவசர ஒன்று கூடல் என்பது எனக்கு சந்தோசமாகவிருக்கிறது.
 
எனவே மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பாரிய தொகை ஒன்றினை நாம் அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது கட்டாயமாகும் என்று நான் கேட்டுக்கொள்வதுடன், நாம் முதலில் ஒற்றுமைப் படவேண்டும் நம் ஒற்றுமைதான் இப்படியான அனர்த்தம் போன்ற பாதிப்புக்களில் உள்ளாகும் மக்களையும் மாவட்டங்களையும் நாமும் பார்க்கலாம் என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனதுரையில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM