(நாச்சியாதீவு பர்வீன்)
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் பணிப்பின்  பேரில்  அனுராதபுரமாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தொகுதி அமைப்பாளர்களுடன்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவுத்தர் நெய்னா முஹம்மது சந்திப்பொன்றை மேற்கொண்டார் . இந்த சந்திப்பானது கடந்த வெள்ளிக்கிழமை (3) நாச்சியாதீவில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸினை விரிவாக்கம் மற்றும் மீள்கட்டமைப்பு   பற்றி விரிவாக  பேசப்பட்டதோடு இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் என பல விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன .

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் ஹக்கீம் அனுராதபுரத்திற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது  தொய்வடைந்துள்ள கட்சியின் வளர்ச்சி பற்றியும் கட்சியின் மீள்கட்டமைப்பு பற்றியும் தொகுதி அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் முதற்கட்டமாக அனுராதபுர மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ .சி .ராவுத்தர் நெய்னா முஹம்மது அவர்களின் தலைமையில் கட்சியின் மீள்கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
 
கட்சிக்காக  கிராமங்கள் தோறும் கிளைகளை அமைத்தல், தொகுதிக்கு 500 இளைஞர்களை உள்வாங்குதல், பழைய போராளிகளை இனங்கண்டு அவர்களை கட்சியுடன் இணைத்து அவர்களை கவுரவித்தல், அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் போது மாவட்ட அமைப்பாளரின் அங்கீகாரத்துடன் வழங்குதல் போன்ற முடிவுகள் தொகுதி அமைப்பாளர்களினால் முன்வைக்கப்பட்டு அவைகள் தீர்மானமாக  அங்கு எடுக்கப்பட்டன.
 
வீட்டுக்கு வீடு மரம் நடுதல் திட்டத்தை அனுராதபுரத்தில் செயற்படுத்துவது தொடர்பிலும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபையின் மூலம் இந்த மாவட்டத்திற்கு செய்த அபிவிருத்திப்பணிகள் , உரிமைகள் தொடர்பில் மேற்கொண்ட செயற்பாடுகள் போன்றே எதிர்வரும் காலங்களிலும் மக்களுக்கு சென்றடையும் விதத்தில் செயலாற்ற தொகுதி அமைப்பாளர்கள் இணங்கினார்
 
இந்த மாவட்டத்தின் மிகவும் முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற சிறுநீரக நோயினை கட்டுப்படுத்தும் வகையில் தூய்மையான குடிநீரினை அதற்க்கு பொறுப்பாக இருக்கின்ற கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என அங்கு கருத்து முன்வைக்கப்பட்டது. விரைவில் அனுராதபுர மாவட்டத்து இளைஞர்களை ஒன்றிணைத்து இளைஞர் மாநாடொன்றை நடாத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் மனிதவளத்தின் முக்கியத்துவம் பற்றி ராவுத்தர் நெய்னா முகம்மது தெளிவு படுத்தினார்.
 
மறுநாள் முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற நேகம, கலாவெவ, கனேவல்பொல போன்ற பிரதேசங்களுக்கு சென்று  கட்சியின் மீள்கட்டமைப்பு தொடர்பாக  கட்சியின் மூத்த ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.
 
இந்த நிகழ்வில் அனுராதபுரம் வடக்கு தொகுதி சார்பில் முஹம்மத் முன்தீர், அனுராதபுரம் கிழக்கு தொகுதி சார்பில் ராஜமதுல்லாஹ், மிகிந்தலை தொகுதி சார்பில் ரபீக் ஆசிரியர், கலாவெவ தொகுதி சார்பில் பாஹிம்  மற்றும் ரஷீத்  ஆசிரியர், நௌபர், முஹம்மத் ராபி,கரீம் மௌலவி, நாச்சியாதீவு பர்வீன், ராபி ஆகியோர் கலந்து கொண்டனர் .
Displaying 17093862_707789722726907_534270416_n.jpg
Displaying 17105723_707790279393518_252129235_n.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM