உங்கள் மீது நேசம் கொண்ட மு காவின் தொண்டனாகிய நான் உங்களிடமும்,உங்கள் மனச்சாட்சியுடனும் உரையாட விரும்புகிறேன்.

ஒரு இயக்கத்தின் உயிரோட்டமான செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானவர்கள் தலைவருக்கு அடுத்த படியாக செயலாளர். அந்த வகையில் நீங்கள் உங்கள் சேவையை மறைந்த தலைவருக்கு பின்னரான காலப்பகுதில் தற்போதைய தலைவருடன் இணைந்து நீங்கள் செயல்பட்டதை நன்றியுடன் நினைவு கூர்ந்தவனாக,உங்களின் அன்மைக்கால செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்தவனாக நான் மட்டுமல்ல மு காவின் தொண்டர்கள் அனைவரும் இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களுடைய செயலாளர் பதவியின் மீது தலைவரும் தொண்டா்களும் அதிர்ப்தி அடைந்தது கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது வேட்பாளர் தெரிவு நடந்து முடிந்ததன் பின்னர் நீங்கள் உங்கள் தனிப்பட்டவர்களின் பெயர்களை அதில் உள்வாங்கவில்லை என்பதற்காக மூன்று நாட்களாக கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒழித்திருந்த வேளை ரகசிய பொலிசாரின் உதவியுடன் உங்களைக் கண்டுபிடித்து சமாதானம் செய்து உங்களை வேட்பாளர் பட்டியலில் ஒப்பமிட வைத்ததிலிருந்து ஆரம்பமாகியது.

அதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நீங்கள் மீண்டும் பாராளமன்றம் செல்ல வேண்டும் என்கிற முடிவு கட்சியின் வளர்ச்சியையும், தொண்டா்களின் கனவுகளையும் குழிதோண்டி புதைப்பதுபோல் இருந்தது. அதன் பின்னரான உங்களின் நடவடிக்கை கட்சியின் செயற்பாடுகளுக்கு சவாலாக இருந்ததன் காரணமாகவே செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
முதலில் பாராளுமன்ற கனவை நிவர்திக்க அந்த மாற்றத்திற்கு நீங்கள் உடன் பட்டதும் பின்னர் அது பழிக்கவில்லை என்றதற்காக கிழக்கின் எழுச்சி என்கிற ஒரு சதிக்குப் பின்னால் நின்று கொண்டு மு காவுக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டதும் அது தோற்றுப்போக தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்து நீதிமன்றம் சென்று கட்சியின் செயற்பாட்டை முடக்க நினைத்ததும். அதுவும் தோற்றுப்போக மீண்டும் சமரசத்துடன் கட்சியின் செயற்பாட்டில் இணைந்து செயலாளர் பதவியைப் பெற்று உங்கள் பேரம் பேச்சால் உங்களின் என்னங்களை நிறைவேற்ற எத்தனித்தபோதே கட்சியின் உயர்பீடம் எடுத்த முடிவினாலேயே உங்களுக்கு செயலாளர் பதவி இல்லாமல் போனது . காரணம் உங்களின் நடவடிக்கைமீது கட்சியின் தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் மட்டுமல்ல உங்களின் மகனின் செயற்பாடுகள் அனைத்தும் இந்தக் கட்சியை அழிக்கத் துடிக்கும் சகுனிகளின் கூலியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தா்ப்பத்தில் இந்த செயலாளர் பதவி என்பது உங்களிடம் இருப்பது நிச்சயமாக கட்சியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமில்லாதது.

மீண்டும் உங்களின் சில செயற்பாட்டை நீங்கள் விசுவாசத்துடன் கட்சியின் தலைவருக்கும், தொண்டர்களுக்கும் வெளிப்படுத்துவதற்கான சந்தா்ப்பமாகவே உங்களுக்கு தரப்பட்ட சந்தர்பமே தவிசாளர் பதவிக்கான தெரிவு. அதனை நிராகரித்து சென்ற நீங்கள் மு கா தலைவர் அன்று இரவு உங்களை வீட்டில் வந்து சந்தித்தபோது சமாதானமாகி காலையில் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன் என்றுவிட்டு அன்றைய இரவே பசீரின் தூதாக வந்த நசார் என்பவரை சந்தித்து மீண்டும் நீங்கள் முருங்கை மரமேறி இருப்பது எங்களுக்கு மிகவும் கவையாக உள்ளது ..

ஆகையால் இந்தக் கட்சியின் நன்மை கருதி நீங்கள் உங்கள் செயற்பாட்டை தரவேண்டும்.
என்று கேட்டவனாக ” நீங்களும் பத்தோடு பதினொன்றாக”கட்சி தொண்டா்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று வினயமாக வேண்டிக்கொள்ளும் தொண்டன்.

உங்கள் மீது விசுவாசம் இழக்காத

முஹம்மது பாரீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM