Web
Analytics
அப்துல் ரசாக் அவர்களின் திடீர் மரணம் மூலமாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தனக்கான ஒரு சர்வதேச குரலினை இழந்து நிற்கிறது... - Sri Lanka Muslim Congress

புலம்பெயர்ந்து சென்றதோடு தாய் நாட்டிற்கும் தனக்குமான உறவினை துண்டித்து விடுபவர்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் விடிவு பற்றியும் தாய் மண்ணின் முன்னேற்றத்திலும் சதா நேரமும் உயிர்ப்புடன் எரிந்து கொண்டிருந்த அப்துல் ரசாக் எனும் ஒரு சுடர் இன்று அனைந்து அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி சென்றுள்ளது. தன் ஒவ்வொரு மூச்சுக் காற்றையும் கடைசி வரை தன் சமூகத்திற்காக அர்ப்பணித்த ஒரு சர்வதேச செயற்பாட்டாளனை நாம் இழந்து நிற்கிறோம்.

கடந்த காலங்களில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் இனவாத நெருக்கடிகளை எதிர்கொண்ட நேரங்களில் எல்லாம் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை விழிப்பூட்டியதோடு மட்டுமல்லாது , சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களை அணி திரட்டி கண்டனங்களும் அழுத்தங்களும் சர்வதேசரீதியாக உருவாகுவதற்கு காரணமாக அமைந்த சமூகப் போராளி இன்று எம்மை எல்லாம் விட்டு விடை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து மண்ணிற்கு நாம் செல்லுகின்ற நேரத்தில் எல்லாம் எம்மை இன் முகத்துடன் ஒரு உடன்பிறந்த சகோதரனுக்கு ஒப்பாக வரவேற்று உபசரித்து , தாய் நாட்டில் வசிப்பவர்களை விடவும் அதீத அக்கரையுடனும் பூரண தெளிவுடனும், முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார் பிரச்சனைகள் -பிரதேசத்தின் அபிவிருத்தி , ஒற்றுமை , கட்சியின் வளர்ச்சி செயற்பாடுகள் பற்றியும் , அரசியல் , ஆன்மீகம் என அத்தனை தளங்களிலும் புலமை மிக்க ஆலோசனைகளையும் கருத்தாடல்களையும் மேற்கொள்வதோடு வந்தோரை வழியனுப்பி வைக்கும் வரை தன்னை அர்ப்பணித்து செயலாற்றும் ஒரு சகோதர வாஞ்சையாளனை நாம் இழந்து நிற்கிறோம்.

சகோதரர் அப்துல் ரசாக் அவர்களது இழப்பானது தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கும் , பிறந்த ஏறாவூர் மண்ணிற்கும் , இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒரு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை தோற்றுவித்துள்ளது என்றால் மிகையாகாது,

அன்னாரின் இழப்பினால் நிலை குலைந்து துயருற்று நிற்கும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு நிம்மதியும் உள அமைதியும் விரைவில் மீளத்திரும்புவதுடன், அன்னார் ஆற்றிய சமூகப்பணிகளையும் , கொடைகளையும், வணக்க வழிபாடுகளையும் வல்ல இறைவன் பொருந்திக் கொண்டு மேலான சுவனபதியை பரிசளித்திட வேண்டும் என உளமாற பிரார்த்திக்கிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM