Web
Analytics
அப்துல் ரசாக் (பாரி) மௌலவி அவர்களின் மறுமைவாழ்வின் ஈடேற்றத்திற்காக இறையோனை இறைஞ்சுகிறேன்; பிரதி அமைச்சர் ஹரீஸ் - Sri Lanka Muslim Congress

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் ஓய்வுபெற்ற மௌலவி ஆசிரியரும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவருமான அப்துல் ரசாக் (பாரி) மௌலவி அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

ஸாஹிரா கல்லூரி மாணவராக இருந்த காலப்பகுதியில் எனக்கு இஸ்லாம் பாடம் கற்பித்த ஆசிரியரான அன்னார் அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். மாணவர்களின் லௌஹீக மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்ட ஒரு ஆசிரியராவார்.

மேலும் அன்னார் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாமாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியதோடு அப்பள்ளிவாசலின் தலைவராகவும் செயற்பட்டு இப்பிரதேசத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பினைச் செய்திருந்தார்.

இப்பிராந்தியத்தின் ஆன்மீக மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய அன்னாரின் மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை கொடுப்பதற்கும் அன்னாரின் கப்ரை விசாலமாக்கி, வெளிச்சமாக்கி சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக்கிக் கொடுப்பதற்கும் பாவங்களை மன்னித்து நன்மைகளை அங்கீகரித்து அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்னும் உயர்வான சுவர்க்கத்தை அருளுவதற்கும் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

சட்டத்தரணி எச்.எச்.எம். ஹரீஸ் (பா.உ) 
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர், 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM