Web
Analytics
அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் பவுசர்கள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress

இலங்கையில் சகலருக்கும் பாதுகாப்பான தூய குடிநீரை வழங்கும் நோக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீரில் கடல் நீர் கலந்துள்ள பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கப்பெறாத பகுதிகளுக்கும் குடிநீர் பவுசர்களை பெற்றுக்கொடுப்பதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இம்முறை உலக நீர்தின நிகழ்ச்சிகளுக்கு சமாந்தரமாக மாத்தறை, மொனராகலை மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கான குடிநீர் பவுசர் விநியோகிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் இன்று (21) அமைச்சில் நடைபெற்றது.

வழங்கப்பட்ட நீர் பவுசர்கள் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஒருங்கிணைப்பு சேவை மத்திய நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் பவுசர் வழங்கும் கருத்திட்டத்திற்காக 235 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னர் குருநாகல், புத்தளம், அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை, ஹம்மாந்தோட்டை, பொலன்னறுவை, காலி மற்றும் கொழும்பு முதலான மாவட்டங்களுக்கான குடிநீர் பவுசர்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM