சப்னி அஹமட்- 

 

திருகோணமலை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்இலங்கைத்துறை முகத்துவாரம் (லங்கா பட்டிடனம்) பிரதேசத்தில் கிழக்குமாகாணத்தில் சுகாதார அமைச்சின் முயற்சியில் அமைக்கப்பட்ட புதியஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(09) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியின் தேசியஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் 8.2மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

குறித்த அலுவலகம் மூலம் நல்லாட்சி அரசில் அதிகமான சேவைகளைகிழ்ககு மாகாணம் போன்ற ஏனைய மாகாணங்களுக்கும்இவ்வலுவலகத்தின் தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காகுமாரத்துங்கவினால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை பெரும்மகிழ்வுடன் பாராட்டுகின்றோம். அது ஸ்ரீலங்கா முஸ்ளிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற இரண்டு பெரும் சிறுபான்மைஇனத்தவரின் கட்சிகளின் அதிகாரங்களும் மிக சிறப்பான முறையில்எமது கூட்டாசியை மிக சிறந்து முறையில் மூவின மக்களுக்குமானசேவைகள் மேற்கொண்டு வருகின்றோம். அது போல் இரு கட்சிகள்மாத்திரம் இன்றி இதில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள்சுதந்திர கூட்டமைப்பு போன்ற இரு பிரதான கட்சிகளும் இணைந்துநல்லாட்சி அரசிலை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வைத்தியசாலை சுமார் 05 கிலோமீட்டருக்கு மேல் உள்ள ஈசலம்பற்று செல்ல விருந்த நிலையையும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற இப்பிரதேச மக்கள் நண்மை கருதியுமே இவ்வைத்திய சேவையை வழங்குகின்றோம். என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார். 

 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர்அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட்நஸீர்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி,கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான நடராஜா, ஜானதர்த்தன், கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் மாகாணப்பணிப்பாளர் முருகானந்தன்,திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கயல்வெளி, வைத்திய அத்தியட்சகர், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன்பொதுமக்களும் இதன் போது கலந்துகொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM