காத்தான்குடி கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வகுப்பறைக்கட்டிடத்திற்காக 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காக அடிக்கல் நடும் நிகழ்வும், 8.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவல்கத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும்m  நேற்று (12) இடம்பெற்றது.

இதன் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் உள்ளிட்டவர்களுடன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்;

எனது அமைச்சுக்கு கீழ் உள்ள சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேசத்தங்களுக்கும் இன பாகுபாடு அற்ற முறையில் நிதிகளை ஒதுக்கி வருகின்றோம். மத்தியரசினால் எமக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை சமூக, கல்வி மற்றும் கலாச்சார விடயங்களை கருத்திற்கொண்டு நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் இத்திணைக்களத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

குறித்த நிலையம் மிகவும் முக்கியமாக புணரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவேண்டியது இவ்நிலையத்திற்கு 15 லட்சம் நிதி இவ்வருடம் ஒதுக்கப்பட்டாலும் அடுத்த வருடம் 35 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து இவ்வாறான வலது குறைந்த மாணவர்களுக்கு சிறந்த கற்றல் நிலையமாக மாற்றுவதற்காக நான் அர்ப்பணிப்புடனே மீது பணத்தினை ஒதுக்குவதற்காகவும் ஆலோசித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளேன். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் கல்வி, கலாச்சார, சமூக மற்றும் சமய செயற்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பல மில்லியன் கணக்கான நிதிகளை ஒதுக்கியுள்ளோம் இன்னும் பல நிதிகளை ஒதுக்கி அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தவும் உள்ளோம். என்றார்.

சப்னி அஹமட்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM