குருநாகல், தோரயாய நீர் வழங்கல் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று (20) ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் குருநாகல் மாவட்டம் – மல்லவபிடிய பிரதேச செயலக பிரிவிலுள்ள 04 கிராம சேவகர் பிரிவில் சுமார் 7500 பயனாளிகள் நன்மையடையவுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமேல் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடான 365 மில்லியன் ரூபாய் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரை் ஜே.சி. அலவதுவல, மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM