Web
Analytics
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நேற்றைய ஜனாதிபதிக்கு பதிலளிக்கும் வகையிலான பாராளுமன்ற உரை பாராடத்தக்கது ! - Sri Lanka Muslim Congress

எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வை அண்மையில் ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றியிருந்தார். அதனை நான் முழுமையாகப் படித்த போது குறித்த கொள்கைப் பிரகடன உரையில் சிறுபான்மைச் சமூகம் தொடர்பில் அவர் எதனையும் தெளிவாகக் கூறாதது எனக்கு மனவேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவரது உரை தொடர்பில் பல கேள்விகள் எனக்குள் எழுந்தன.

இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் உரை, அதுவும் ஜனாதிபதியால் ஆற்றப்பட்ட உரை என்பதால் அதனை வெளியே இருந்து கொண்டு விமர்சித்தல், கருத்துத் தெரிவித்தல் தொடர்பில் உள்ள சட்டச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு எதனையும் என்னால் வெளிப்படையாக பதிவிட முடியாது போய்விட்டது. ஆனால், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (10) நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக உரையாற்றியிருந்தார். ,

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தைப் படித்த போது, தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் அவர் எதனையும் தெளிவாகக் கூறாமை குறித்து நான் அடைந்த ஏமாற்றம், கவலை, ஏக்கம், அச்சம், என்னுள் எழுந்த கேள்விகள், மனப்போராட்டங்கள் இவைகள் அனைத்தையும் அடியொட்டியதாக கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்றைய தனது நாடாளுமன்ற உரையில் அக்கு வேறு ஆணி வேறாகச் சுட்டிக் காட்டியமை மிகச் சிறப்பான விடயம். அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் கிரீடம் சூட்டி வரவேற்கப்பட வேண்டியவை நன்றிகள் அமைச்சரே.

அதேபோன்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான எனது நண்பர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களது உரையும் சிறப்பாக அமைந்திருந்தது.அவருக்கும் எனது நன்றிகள்.-

 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM