கடந்த பெப்­ர­வரி மாதம் அம்­பா­றையில் இடம்பெற்ற வன்­செ­யல்­க­ளினால் முழு­மை­யாக சேதங்­க­ளுக்­குள்­ளான அம்­பாறை ஜும்ஆ பள்­ளி வா­சலின் நஷ்டஈடு­ ம­திப்­பீட்டுத் தொகை­யான 27 மில்­லியன் ரூபா­வையும் தாம­தி­யாது வழங்குவதற்கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் புனர்வாழ்வு அதி­கார சபைக்கு உத்­த­ரவு பிறப்பித்­துள்ளார்.

அத்­தோடு கடந்த வருடம் நவம்பர் மாதம் கிந்தோட்­டையில் இடம்­பெற்ற வன்செயல்களினால் பாதிக்­கப்­பட்ட சொத்துக்களுக்கு ஏன் இது­வரை நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் புனர்­வாழ்வு அதிகார­சபை அதி­கா­ரி­க­ளிடம் கேள்வி எழுப்பிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கிந்தோட்டை நஷ்டஈடு­க­ளையும் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொண்டார்….

நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகுதியில் பிர­தமர் தலை­மையில் கண்டி வன்செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்துக்களுக்­கான நஷ்ட ஈடுகள் வழங்கும் நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் தொடர்­பாக ஆராயும் கூட்­ட­மொன்று நடை­பெற்­றது…

இக்­கூட்­டத்தில் அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் மலிக் சம­ர­விக்­ரம உட்­பட பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர். புனர்­வாழ்வு அமைச்சு மற்றும் புனர்­வாழ்வு அதி­கா­ர­ச­பையின் அதி­கா­ரி­களும் பங்கு கொண்­டி­ருந்­தனர்…..

இக்­கூட்­டத்தின் போது அம்­பா­றையில் இடம் பெற்ற வன் செயல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்ளி­வாசல் மற்றும் சொத்­துக்­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கு­வது தாம­த­மா­கின்­றமை தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்­வி­யெ­ழுப்­பினார்…

இச்­சந்­தர்ப்­பத்தில் அம்­பாறை ஜும்ஆ பள்ளிவாசலின் நஷ்­ட­ஈடு மதிப்­பீடு 27 மில்­லியன் ரூபாய்கள் என தெரி­விக்­கப்­பட்­டது. இந்த நஷ்ட ஈட்­டினை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவைப் பத்திரம் ஒன்­றினைத் தயா­ரித்து தாம­த­மின்றி சமர்ப்­பித்து அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் பிர­தமர் புனர்­வாழ்வு அதி­கார சபை அதி­கா­ரி­களை வேண்­டிக்­கொண்டார்…

இது­தொ­டர்பில் புனர்­வாழ்வு அமைச்சின் மேலதிகப் பணிப்­பாளர் எஸ்.எம்.பதுர்­தீனைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, கண்டி வன்செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு வழங்­கு­மாறு பிரதமரினால் உத்­த­ரவு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அம்பாறை மற்றும் கிந்­தோட்டை வன்செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு எவ்­வாறு வழங்கப்பட வேண்­டு­மென தெரிவிக்கப்படவில்லை….

1987 ஆம் ஆண்டின் சுற்று நிரு­பத்­தின்­படி வன் செயல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­களின் நஷ்ட மதிப்­பீட்டில் 20 வீதமே நஷ்ட ஈடாக வழங்க முடியும். அத்­தோடு பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நஷ்ட ஈடாக ஒரு மில்­லியன் ரூபா­வுக்கு உட்­பட்ட தொகையே வழங்க முடியும். இவ்­வாறே சுற்று நிருபம் தெரி­விக்­கி­றது. இதன் கார­ண­மா­கவே அம்­பாறை, கிந்­தோட்டை நஷ்ட ஈடுகள் வழங்குவதில் தாமதம் ஏற்­பட்­டது…..

அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட ஜும்ஆ பள்­ளி­வாசல் உட்­பட மற்றும் சொத்துக்களுக்கு நஷ்ட ஈட்­டினைப் பெற்றுக்கொ­டுக்க அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை தயார் செய்­யும்­படி பிர­தமர் பணித்­தி­ருக்­கிறார். தற்­போது அதற்­கான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்றுக் கொண்டிருக்கின்­றன. அடுத்த வார­ம­ளவில் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க முடியும் என்றார்….

Vidivelli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM