Web
Analytics
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கண்டி -உடபலாத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - Sri Lanka Muslim Congress

கண்டி மாவட்டம், உடபலாத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (21) உடபலாத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச அரச அதிகாரிகள், மற்றும் அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டதுடன், அப்பிரதேச மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், கழிவு நீர், குப்பை அகற்றல், குடி நீர் பிரச்சினைகள், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

பிரதியமைச்சர் அநுராத ஜயரட்ன, கம்பளை நகர சபை தவிசாளர் பீ.எம். அருன குமார, உடபலாத பிரதேச செயலாளர் துஷாரி தென்னகோன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM