Web
Analytics
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கண்டி மாவட்டம், தொழுவ மற்றும்  உடபலாத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - Sri Lanka Muslim Congress

கண்டி மாவட்டம், தொழுவ மற்றும்  உடபலாத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (11) தொழுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச அரச அதிகாரிகள், மற்றும் அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டதுடன், அப்பிரதேச மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததார்.

கம்பளை நகர சபை தவிசாளர் பீ.எம். அருன குமார, உடபலாத்த பிரதேச சபை தவிசாளர் டி.ஜீ. குனசேன, தொழுவ பிரதேச செயலாளர் தயாநன்த, கம்பளை நகர சபை தவிசாளர் பீ.எம். அருன குமார, உடபலாத பிரதேச செயலாளர் துஷாரி தென்னகோன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM