அம்பாரை மாவட்டத்தில், இறக்காமம் பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், இறக்காமம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களுக்கிடையில் செவ்வாய்க்கிழமை (17) நண்பகல் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேசத்தில் கார்பட் பாதை அமைத்தல், வர்த்தகக் கட்டடத் தொகுதி, குளத்தையும் அதனை அண்டிய மைதானத்தையும் அழகுபடுத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான முஸ்மி, ஜிப்ரி, றியாஸ் ஆகியோர் பங்குபற்றினர்.

படம்: ஜெம்சாத் இக்பால்;)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM