Web
Analytics
அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி - Sri Lanka Muslim Congress
மலரும் இஸ்லாமிய புத்தாண்டு உலகளாவிய முஸ்லிம்களின் வாழ்வில் விடிவையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி நிரந்தரமான சமாதானத்தை விதைக்க வேண்டும்

என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1440 ஆரம்பமாவதையொட்டி அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இஸ்லாத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் தியாகத்தின் வலிமையை வலியுறுத்திவிட்டு மறைய, முதல் மாதமான முகர்ரமும் தியாகத்தின் சிறப்பை உணர்த்தியவாறே உதிக்கின்றது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித மக்காவிலிருந்து புனித மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இஸ்லாமிய ஆண்டுக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 

வேறு ஆண்டு கணிப்புகளுக்கு பழக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் எங்களுக்கே உரித்தான இஸ்லாமிய ஆண்டு கணக்கிற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கேற்ப நாளாந்த நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது அவசியமாகும் என அமைச்சர் மேலும் இவ்வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM