Web
Analytics
அமைச்சர் ஹக்கீமின் அபிவிருத்திப்பணிகளில் ஒருமைல் கல் பாரிய தம்புள்ள குடிநீர் திட்டம் . - Sri Lanka Muslim Congress

– நாச்சியாதீவு பர்வீன் –
இன்றைய உலகின் மிகமுக்கியமான பாவனைப்பண்டமாக நீர் உருவாகியுள்ளது. இந்த உலகில் 70 சதவிகிதமான பகுதி நீரினால் சூழ்ந்திருந்தாலும் அவற்றை பருக முடியாத நிலையே காணப்படுகிறது.

முழு உலகிற்கும் தேவையான சுத்தமான குடிதண்ணீரை 2030 க்குள் வழங்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது இனிப்பான செய்தியாக இருந்தாலும் ஆப்பிரிக்காவின் வறண்ட பிரதேசங்களுக்கும், பாலைவன பிரதேசங்களுக்கும் தூய்மையான குடிநீரினை வழங்குவதில் உலக பெரும் போராட்டங்களை செய்யவேண்டியிருக்கும்.

உலகத்தில் தூய்மையான குடிநீரினை பெற்றுக்கொள்கின்ற நாடுகளில் இலங்கையும் முன்னணியில் இருப்பதாகவும், இந்தியாவை விடவும் இலங்கையில் அதிக சதவிகிதமான மக்கள் தூய நீரினை பெற்றுக்கொள்கின்றார்கள் என்றும் அதற்கான காரணம் இந்த அரசு என்றும் அண்மையில் இந்தியப்பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இலங்கை மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்திய எக்சிம் வங்கி மற்றும் இலங்கை மக்கள் வங்கி ஆகியவற்றின் 10,000 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் உருவாக்கப்பட்ட நீர்வழங்கல் கருத்திட்டமே பாரிய தம்புள்ள நீர்வழங்கல் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாத்தளை,அனுராதபுர மாவட்டங்களை சேர்ந்த 6 பிரதேச செயலகங்களுக்கு கீழுள்ள 175 கிராமசேவகர் பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்தும் பயனாளர்கள் பயன்பெறுவார்கள்.

மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ளை,கலெவல, நாவுல ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த 135 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கின்ற 98,301 பயனாளர்களும், அனுராதபுர மாவட்டத்தில் கெக்கிராவ, பலாகல, பலூகஸ்வெவ ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 40 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கின்ற 75,699 பயனாளர்களுக்கும் நேரடியாக தூய்மையான குடிநீரினை பெற்றுக்கொள்ள இது வழிசமைக்கின்றது.

மிகமுக்கிய அத்தியவசிய தேவையான தூய குடிநீரின் பயனை இந்த பிரதேசத்து மக்களின் நலன்கருதி அமைச்சர் ஹக்கீம் நிறைவேற்றிக் கொடுத்திருப்பது நன்மை பயக்கும் விடயமாகும். வரட்சியான காலநிலையும், போதிய நீர்மூலங்களும் இல்லாத இந்தப்பிரதேசமானது இனி பொழிவு பெறும் என நம்பலாம்.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கருத்திட்டம் குறித்த காலத்தைவிட அதிகமான காலத்திலேயே நிறைவுக்கு வந்துள்ளது. இந்த தாமற்க்கான நியாயமான பாலகாரணங்களை சுட்டமுடியும். தொடர்ச்சியான சீரற்ற காலநிலை, தேவையான பெளதீக வளக்குறைபாடு, தொழிநுட்ப ரீதியிலான குறைபாடுகள் போன்ற பல காரணங்களை அடையாளப்படுத்த முடியும்.

சவால்களுக்கு மத்தியில் அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால் பூர்த்திசெய்யப்பட்ட பாரிய தம்புள்ள குடிநீர் விநியோகத்திட்டம் கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்தியமாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார, பிரதியமைச்சர் லட்சுமண் வசந்த பெரேரா இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் டரன்ஜித் சிங்சந்து, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் உப தலைவர் சபீக் ரஜாபிதீன், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.சி.ராவுத்தர் நெய்னா முஹம்மத் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பூர்த்திசெய்யப்பட்ட பாரிய தம்புள்ள நீர்வழங்கல் திட்டத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு உரைநிகழ்த்தும் போது இந்த நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது குடிநீர் பிரச்சினையாகும். இலங்கையின் அநேக பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்தப்பாரிய தம்புள்ள திட்டத்த்தின் மூலம் இந்தப்பிரதேசத்து மக்களின் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வினை பெறமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM