Web
Analytics
அம்பாறை நகருக்கு இடம்மாறவிருந்த கல்முனை நகர அபிவிருத்தி காரியாலயம் மு.கா முயற்சியினால் முறியடிப்பு - Sri Lanka Muslim Congress

அம்பாறை நகருக்கு இடம்மாற இருந்த கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயம் ஒரு போதும் இடம்மாறப்பட மாட்டாது என்று

பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறுதியளித்துள்ளார்.

கல்முனை நகர அபிவிருத்தி காரியாலயம் அம்பாறை நகருக்கு இடம்மாறவிருந்த விடயம் சம்மந்தமாக அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் கோரிக்கைக்கும், முன்னெடுப்புக்கும் அமைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர்வளங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் முயற்சியினால் இடம்மாறப்படவிருந்த கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்படி அமைச்சருடனான சந்திப்பு நேற்று (9) பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் காரியாலயம் கல்முனை நகரை விட்டு இடம்மாற்றப்படமாட்டாது என்பதோடு, இது கரையோர பிரதேசத்திற்கான நிரந்தர காரியாலயமாகவும் செயற்படும் எனவும், மேலும் இவ் இடம்மாற்றம் இரத்து செய்தல் சம்மந்தமான விடயங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதிமொழியளித்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM