Web
Analytics
அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நீர்ப்பாசன குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு  - Sri Lanka Muslim Congress

நீர்பாசன அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசானாயக்கா அக்கரைப்பற்றுக்கு, அண்மையில் (06)  விஜயம் செய்தார். இங்கு கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று நீர்ப்பாசன விவசாய பிரநிதிகள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச அரசியல் வாதிகளும் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் பைசால் காசிம் “இலங்கையில் மொத்த நெல் உற்பத்தியில் 1/5 சதவீதமான நெல் உற்பத்தியை அம்பாரை மாவட்டம் வழங்கி கொண்டிருக்கின்றது. அத்துடன் இலங்கையிலுள்ள வயல்களில் அதிகூடிய விளைச்சலை பெறக்கூடிய காணிகளும் இங்குதான் உள்ளன. 
2017ம் ஆண்டு 60 சதவீதமான காணிகளே செய்கை பண்ணப்பட்டன. 2018ம் ஆண்டில் 20 சதவீதமான காணிகளே செய்யப்பட்டிருக்கின்றது. 2019ம் ஆண்டில் எத்தனை வீதம் என்பது கூறமுடியாதுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக மழை குறைந்து சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைந்ததே இதற்கான காரணமாகும்.

எனவே, இப்பிரச்சினையை நாம் தொடர்ந்து எதிர்பார்க்கலாம். இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு குறைந்த நீரினை பயன்படுத்தி சிக்கனமான முறையில் வீண்விரயத்தை குறைத்து பயிர் செய்கை முறையில் ஈடுபடும் முறையை பின்பற்ற வேண்டும். இதற்கு அரசாங்கம் மஹாவலி பிரதேசங்களில் அமைக்கப்பட்டிப்பதை போன்று இங்கு நீர் வழங்கும் கால்வாய்களை சீமெந்தினால் செப்பனிட்டு வீண்விரயத்தை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறைக்கு ஓரளவு நிவாரணம் பெறலாம் என நினைக்கின்றேன்.

அத்துடன் இப்பிரதேசத்தில் தற்போது செய்யப்படுகின்ற ஏக்கரின் அளவினை அதிகரிக்க வேண்டும் எனவும் கசிவு நீரினை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு பசளைகளை மானிய அடிப்படையில் வழங்க வேண்டும். அத்துடன் விவசாயம் செய்பவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கவும் வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM