Web
Analytics
அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ள புதிய தோ்தல் முறைமையில் முஸ்லிம் சமுகத்திற்கு பாரியதொரு ஆபத்தானதாகும்; நிசாம் காரியப்பர் - Sri Lanka Muslim Congress

தற்கால அரசியல் சீர்திருத்தமும் எதிா்காலத்திலான தோ்தல்முறைமையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு  முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் அதன் தலைவா் என். எம் அமீன் தலைமையில் இன்று (24) பொரளை செற்றக் மண்டபத்தில் நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளா் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், சட்டத்தரனி ருஸ்தி ஹசீப், சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோறும்  முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் சிவில் சமுகத்தினா்களும் கலந்து கொண்டனா்.

தேர்தல்முறைமை புதிய தோ்தல் முறையில் சிறுபாண்மையினருக்கு இருக்கும் ஆபத்துக்கள் எல்லை நிர்ணயம் தொகுதி முறைமை பாராளுமன்ற பிரநிதித்துவம் மாகாண சபை பிரநிதித்துவம் கடந்த உள்ளுராட்சித் தோ்தலில் நாம் கண்ட அனுபவங்கள் பற்றியும் கலந்து உரையாடினாா்கள்.

அங்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளா் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கருத்து தெரிவிக்கையில் –

இந்த அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ள புதிய தோ்தல் முறைமையில் முஸ்லிம் சமுகத்திற்கு பாரியதொரு ஆபத்தானதாகும் நாம் பழைய முறையிலான தோ்தலையே தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிழக்கு வடக்கில் முஸ்லீம்களுக்கு அம்பாறை மாவட்டத்தினைத் தவிா்ந்த எந்த தொகுதியிலும் முஸ்லிம் பிரநிதித்தவம் அமைவதற்கு சாத்தியமில்லை, வட கிழக்குக்கு வெளியே செறிந்து வாழும் முஸ்லிம்களுக்கு அறவே இல்லாமல் போகிவிடும் . கண்டி, கொழும்பு, குருநாகல், களுத்துறை போன்ற பிரதேசங்களில் கணிசமான முஸ்லீம்கள் செறிந்து வாழ்ந்தாலும் அங்கு பிரநிதித்துவம் கிடைக்கமால் போகக் கூடிய சாத்தியம் உள்ளது.

இவ் விடயத்தில் பெரும்பான்மையான இரு கட்சிகளினதும் கைகளும் ஓங்கிவிடும். அவா்கள் சிறுபாண்மை சமுகத்தின் எவ்வித ஆதரவுமின்றி பெரும்பான்மையினா் ஆட்சியமைப்பதற்கே இப்புதியதேர்தல் முறை வகுக்கப்படுகின்றது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியும் புதிய முறையில் மாற்றம் ஏற்படுவதையே குறிக்கோளாக உள்ளனா் மறைந்த ஜே.ஆர்.ஜெயவா்த்தனவினாவினால் 1977ல் கொண்டு வந்த இந்த அரசியல் முறைமையினால் சிறுபாண்மைச் சமுகத்திற்கு இனவிகிதாரத்திற்கு ஏற்ப பிரநிதிகள் தக்க வைத்துக் கொள்ள வழிசமைத்தது. அத்துடன் ஆட்சி அமைக்க சிறுபான்மைச் சமுகத்தின் ஆதரவு தேவைப்பட்டது. அதுவே இதுவரை காலமும் நடைபெற்று வருகின்றன. அரசின் சில விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எமக்கு பல்வேறு சா்ந்தா்பத்தில் உதவி வந்துள்ளது. எனவும் நிஸாம் காரியப்பா் அங்கு உரையாற்றினாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM