Web
Analytics
அரசியல் கட்சிகளுக்கான மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக மு.கா பிரதிநிதிகள்  சீனா  பயணம். - Sri Lanka Muslim Congress

தென் ஆசிய நாடுகளிலுள்ள அரசியல் கட்சிகளுக்கான மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு சீனா அரசாங்கத்தின் அனுசரணையுடன் அந்நாட்டு கம்னியூஸ் கட்சியினுடைய 40வது ஆண்டு நிறைவு விழாவில் பங்குபற்றுவதற்கு இந்தியா, பாகிஸ்தான், நேபால், மாலைதீவு, இலங்கை போன்ற பல நாடுகள் உட்பட அந்நாட்டு அரசியல் கட்சிகளின் முக்கிய மூத்த உறுப்பினர்கள் சிலர் விசேடமாக அழைக்கப்பட்டுள்ளார்கள் இம் மகாநாட்டில் இன்றைய அரசியல் பொருளாதார சமூக அபிவிருத்தி சம்பந்தமான கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற இருக்கின்றன.

இவ்விசேட மகாநாட்டில் இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் சிபார்சில்  கட்சியின் முன்னாள் மூத்த பொதுச் செயலாளரும், உயர்பீட, அரசியல் விவகார பணிப்பாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களுடன் மு.கா வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவருமான எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களும் இக் கட்சியின் விசேட பிரதிநிதிகளாக கலந்துகொள்வதற்காக சீனா நாட்டுக்கு பயணமாகின்றார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM