சென்ற அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் தொழில் உரிமைகளை, சட்டரீதியாக வழங்குவதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக தகவல் திரட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான முறைப்பாடுகள் 31 666 ஆகும். இவை தொடர்பாக அந்தந்த அமைச்சுக்களின் மூலம் பெற்ற புகார்கள் 25 000 ஆகும். அப்புகார்களுக்கான நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இறுதி முடிவுகளின் பின்னர் அமைச்சுக்களுக்கு தமது தீர்மானமெடுப்பதில் பிரச்சினைகளை ஏற்படுத்திய அரசியல் பழிவாங்கல்கள் சம்பந்தமான் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 693 ஆகும்.

 
இது சம்பந்தமாக மேலும் தேடிப்பார்த்து, பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதியுடன் மூவரடங்கிய குழு ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தர் டப்ளியூ பிரேமதாச தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. சென்ற ஜனவரி 16 ஆம் திகதி இக்குழு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் ஆலோசனையின் படி அந்த அமைச்சில் இருந்து மேல்முறையீட்டு பரிசீலனையை ஆரம்பித்துள்ளது. மூன்று மாதங்களினுள் அதனை அமைச்சரவையிற்கு சமர்ப்பிப்பதற்கு இக்குழு எதிர்பார்ப்பதுடன், இதுவரை 182 மேல்முறையீடுகள் அளவில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. வாரத்திலுள்ள அலுவலக நாட்களில் இக்குழு நேர்முகப்பரிசீலனைக்காக இயங்குவதுடன் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று எஞ்சிய  மேல்முறையீடுகளைப் பரிசீலித்து முடிக்கவுள்ளது. அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை மேற்பார்வை செய்யவுள்ளார்.
 
– கஹட்டோவிட்ட ரிஹ்மி – 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM