முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் செயற்பாடு நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

 நல்லாட்சி அரசிலிருக்கும் திருடர்களைகளையெடுக்கும் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்துள் ளாரென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி வித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்ற விளையாட்டு அரங்கு திறப்பு மற்றும் பரிசளிப்பு விழா என்பனவற்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் என்.எம்.ஷாபி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹரஜூனைஸ் பாருக், புத்தளம் எருக் கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.சபுரு தீன், தொழிலதிபர் நூர்தீன் பர்ஸான், புத்தளம் வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.அஸ்கா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிடு கையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களைப்
பயன்படுத்தி கட்சியின் ஏனைய பாராளுமன்ற, மாகாண சபை உறுப் பினர்களின் உதவிகளுடன் எருக்க லம்பிட்டி முஸ்லிம் மக்களுக்கு மாத் திரமன்றி, முழு வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட அபிவிருத்தி, தொழில்வாய்ப்புக்கள் என்பனவற்றில் கவனம் செலுத்தப்ப டும். ஏனைய அமைச்சர்கள் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, வாக்கு வங்கியை அதிகரிப் கதற்காக குறுகிய வட்டத்திற்குள் அபிவிருத்தி
 பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் சம்பந்தமாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டு வருகின்றன. நல்லாட்சி அர சாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரவி கருனாநாயக்க, தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு முறையற்ற விதத்தில் வீடு ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அமைச்சர் ரவியின் இந்த செயற்பா டானது நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் தலைகுனிவையே ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியலுக்கு வந்து பெரும் செல்வந்தர்களாக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்கள் தாங் களும் ஊழல் குற்றச்சாட்டுகளில் அகப்பட்டு விடுவோமோ என்று இன்று நடுக்கத்துடன் இருக்கிறார் கள். அத்துடன், இன்று இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்க ளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அர சாங்கம் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM