பண்டுவஸ்நுவர தொகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் பைஸர் (ஜே.பீ) உடன் இணைந்து ஸ்ரீ.ல.மு.கா. எமது கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயற்பட்டு வந்த அறிவிப்பாளர் ஏ.டீ.எம் பஸ்லியின் மறைவு எம்மில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது பிரதேசமான மடிகே மிதியால வீதி அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தி எம்மை தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒருவர் என்பதை இங்கு நினைவு கூறவேண்டும். குறிப்பாக சமூகப்பணிகளில் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தவராவார்.

நீண்ட நாட்களாக சுகவீனம் உற்று பெரிதும் சிரமப்பட்டு வந்த போது நாம் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவருக்கு தைரியமூட்டி வந்த நிலையில் இன்று அவர் இறையடி சேர்ந்துள்ளார்.

அன்னாரின் மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் சார்பாகவும் ஆறுதல் கூறுவதோடு வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அருள்புரிவானாக! என பிராத்திக்கிறோம்.

மாகாண சபை உறுப்பினர்,
உயர்நீதிமன்ற சட்டத்தரணி
றிஸ்வி ஜவ்ஹர்ஷா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM