Web
Analytics
அலி ஸாஹிர் மௌலானா இன்று பிரதி அமைச்சருக்கான கடமைப் பொறுப்பேற்பு. - Sri Lanka Muslim Congress
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா,

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராக இன்று (10) அமைச்சில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கனேசன், பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சுர், எம்.எஸ். தௌபீக், லக்கி ஜயவர்த்தன, அமைச்சின் செயலாளர், அமைச்சு அதிகாரிகள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பல பிரமுகர்களும்  கலந்துகொண்டனர்.
 
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சா் அலி சாகிா் மௌலானா –

இந்த அமைச்சினைப் பெற்றுத்தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் முஸ்லீம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் ஆகியோறுக்கு நன்றி தெரிவித்தாா்.

அத்துடன் ஜனாதிபதி  நேற்றும் கூட தனக்கு தொலைபேசியில் பேசி இந்த அமைச்சின் நிறைய மூவினங்களுக்கும் சேவைசெய்யும் ஒரு அமைச்சு, இளைஞா்கள், பாடசாலைமாணவாகள், நான்கு இனங்களுக்கிடையிலான தேசிய ஜக்கியம் சகவாழ்வினை ஏற்படுத்க் கூடிய அமைச்சு அத்துடன் இவ் அமைச்சிக்கு நிறைய நிதி மற்றும் வெளிநாட்டு நிதிகள் உள்ளன. அத்துடன் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.  இவ் அமைச்சின் கீழ் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, முன்னாள் ஜனாதிபதியின்  ஒரு தேசிய சகவாழ்வு நிறுவனமும் உள்ளன.  அமைச்சா் மனோ கனேசனுடன்  இனைந்து வடக்கு கிழக்கில்  என்னால் செய்யக் கூடிய அபிவிருத்திகளை 18 மாத காலத்திற்குள் துரிதமாக செயல்படுத்துவேன் என தெரிவித்தாா் பிரதியமைச்சா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM