அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயத்தை பெண்கள் பாடசாலையாக தரமுயர்த்தித் தந்தமைக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ. ஏ.எல்.தவம் அவர்களுக்கு அக்கரைப்பற்று ஷுறா கவுன்சில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஷுறா கவுன்சிலின் கல்விக் குழு இணைச் செயலாளர் ஏ. றியாஸ் முகமட் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அக்கரைப்பற்று மேற்கில் ஆயிஷா மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இது அக்கரைப்பற்றில் பெருமளவிலான பெண்கள் கல்வி கற்கும் பாடசாலையாக அமைந்துள்ளது. எனினும், தற்போது நிலவும் சமூக ஒழுக்க நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் பாடசாலைகள் அமைய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், மேற்படி ஆயிஷா பெண்கள் கல்லூரியால் மாத்திரம் அக்கரைப்பற்றின் ஒட்டுமொத்த  பெண் பிள்ளைகளுக்கும் கல்வி வழங்க முடியாது.

எனவே, இன்னுமொரு பெண்கள் பாடசாலையின் தேவை மிக அவசியமாக உணரப்பட்டது. அதிலும் குறிப்பாக அக்கரைப்பற்றுக் கிழக்குப் பகுதி என்பது ஊரின் அரைவாசிப் பகுதி என்பதால், அங்கு ஒரு பெண்கள் பாடசாலை அவசியமென உலமாக்கள், கல்வியிலாளர்கள் மற்றும் ஊர் நலன்விரும்பிகளோடு நாம் நடாத்திய கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பொருத்தமான பாடசாலையாக அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயம் அடையாளப்படுத்தப்பட்டது.

மேற்படி விடயத்தை ஸாஹிரா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரோடும் முகாமைத்துவக் குழுவினரோடும் கலந்துரையாடி கௌரவ மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் இவ்விடயத்தில் தானும் மிக நீண்டகாலமாக ஆர்வமாக உள்ளதாகவும், உடனடியாக பெண் மாணவர்களை மாத்திரம் சேர்க்கும் வேலையை நீங்கள் ஆரம்பியுங்கள், அதற்கான அனுமதியையும் தரமுயர்த்தலையும் நான் பாரமேடுக்கின்றேன் எனக் கூறினார்.

அதன் பிரகராம் ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் ஊட்டற் பாடசாலையாக இருந்த ஸாஹிரா வித்தியாலயத்தை மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஊட்டற் பாடசாலையிலிருந்து விலக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்றார். பின்னர் பெண்கள் பாடசாலையாக மாற்ற அனுமதியும் பெற்றுத் தந்துள்ளார். ‘’கல்விக்கு உயிர் கொடுப்போர் மரணிப்பதில்லை’’ என்கின்ற முதுமொழிக்கு ஏற்ப நிலையான தர்மத்தை தவம் அவர்கள் செய்துள்ளார். ‘’அழிகின்ற அபிவிருத்திகளைச் செய்வதை விட – நிலைத்து நிற்கும் விடயங்களிலேயே நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன்’’ என அடிக்கடி அவர் கூறுவதை இப்போது நிருபித்துக் காட்டியுள்ளார். அவருக்கு அல்லாஹ் ஈருலக வாழ்விலும் ரஹ்மத்துச் செய்ய நாம் அக்கரைப்பற்று சமூகத்தின் சார்பில் பிரார்த்திக்கிறோம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM