Web
Analytics
அவசரமாக வர்த்தமானியில் பிரசுரிப்பது எங்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநீதியாகவும்,துரோகமாகவும் இருக்கும்.. - Sri Lanka Muslim Congress

உள்ளுராட்சி தேர்தலில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் அது சம்பந்தமாக இருக்கின்ற விமர்சனங்களை கருத்தில் கொள்ளாதும் அத்துடன் எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையில் உரிய சட்டத்திருத்தங்களை செய்யாமலும், அவசரமாக வர்த்தமானியில் பிரசுரிப்பது எங்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநீதியாகவும், துரோகமாகவும் இருக்கும் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உத்தேச அரசியலமைப்பு, உள்ளுராட்சி தொகுதி நிர்ணயம் என்பன தொடர்பில், சிறுபான்மையினக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் சிலவற்றின் அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றிய முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் புதன்கிழமை (18) இரவு நடைபெற்ற பின்னர் தெரிவித்தார்.

புpரஸ்தாபக் கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் மேலும்கூறியதாவது.
இன்று நாங்கள் இந்த நாட்டு அரசியல் யாப்பு சம்பந்தமான திருத்தங்களுக்கான யோசனைகளை கூட்டாக சமர்ப்பிப்பது தொடர்பாக சிறுபான்மையினரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள், சிறிய காட்சிகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியிலிருக்கின்ற ஏனைய சிறுபான்மை, சிறிய கட்சிகள் சிலவற்றின் அரசியல் பிரதிநிதிகள் கூடி முக்கிய தீர்மானங்களுக்கு வந்திருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பைப் பொறுத்தவரை இந்த நாட்டின் இறைமை, அதிகாரப்பகிர்வு போன்ற பல விடயங்களை நாங்கள் பொதுவான நிலைப்பாட்டை முன்வைக்கயிருக்கின்றோம். அதேவேளை சீர்திருத்தம் சம்பந்தமான கூட்டாக சில மாற்றும் யோசனைகளை பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான குழுவிற்கு எமது தீர்மானங்களை சமர்ப்பிபதென்றும் முடிவெடுத்திருக்கின்றோம்.

அதேநேரம் உள்ளுராட்சி தேர்தலில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் அது சம்பந்தமாக இருக்கின்ற விமர்சனங்களை கருத்தில் கொள்ளாது எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையை தேவையான சட்டத்திருத்தங்களை செய்யாமல் அவசரமாக வர்த்தமானியில் பிரசுரிப்பது எங்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநீதியாகவும், துரோகமாகவும் இருக்கும் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.

சிறுபான்மைச் சமூகங்களும், சிறிய கட்சிகளும் பொதுவாகப் பாதிக்கப்படுகின்ற நிலைமையில், இந்த எல்லை நிர்ணய அறிக்கிகை சம்பந்தாமன எழுந்திருக்கின்ற சர்ச்சைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் கண்டு விட்டுத்தான் வர்த்தமானியில் அது பிரசுரிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கனவே 56 இடங்களில் திருத்தங்கள் அவசியமென்று சட்டம் சம்பந்தமாக விதந்துரைகளைக் கூட செய்திருக்கின்ற நிலைமையில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு அதில் உள்ள தெரிவு முறையில் காணப்படக்கூடிய பாரிய பாதிப்புகள் பற்றி நாங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

ஏனவே, சிறுபான்மையி கட்சிகளோடும், சிறிய கட்சிகளோடும், ஏனைய கட்சித் தலைவர்களோடும் போதிய கலந்துரையாடலை மேற்கொண்டு ஒருமித்த நிலைப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் இதுபற்றிய தீர்க்கமான முடிவை எடுப்பதுதான் சிறந்தது என்பது எங்களது ஏகோபித்த கருத்தாகும்.

மலையக முற்போக்குக் கூட்டமைப்பின் தலைவர், அமைச்சர் மனோகணேசன் கருத்துத் தெரிவிக்கையில், அவசரப்பட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு மற்றும் மாகாண சபைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் அசோக்பீரீஸ் குழுவினரால் கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அறிக்கையை வர்த்தமானியில் பிரசுரித்துவிடக் கூடாதென்றும் அதனால் சிறுபான்மை சமூகங்களும், சிறிய கட்சிகளும் போதிய பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு வழிவகுத்துவிடக்கூடாதென்றும் கூறினார்.

ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தக்கூடிய வகையிலும் ஒரு பொதுவான ஒருமைப்பாட்டிற்கு வருகின்ற வகையிலும் நாங்கள் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கின்றோம். இதில் இன்று சில கட்சிகள் மற்றுமே இங்கு கூடியிருந்தாலும் நாம் எல்லோரும் ஒன்றாக்கூடிய இந்த விடயத்தில் எங்களது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த இருக்கின்றோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM