Web
Analytics
இன ஐக்கியத்திலே எமது நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது ; திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர், எம்.ஐ.எம். மன்சூர் - Sri Lanka Muslim Congress

எம்.சி. அன்சார்)

நாட்டில் நல்லிணக்கத்தையும் நீடித்த சமாதானத்தையும் ஏற்படுத்தாமல் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. 

இன ஐக்கியத்திலே எமது நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது. இன ஐக்கியம் பலமடைய வேண்டும். நாட்டின் இன ஐக்கியத்தை முதலில் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் அரச அதிகாரிகள் உட்பட நம் அனைவருக்கும் உள்ளது. என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று(15) சம்மாந்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும்,  சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமை வகித்து பேசுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதன் மூலமே நிரந்தமான சமாதானத்தை கட்டியெழுப்பி ஸ்திரமான அபிவிருத்தியினை முன்னெடுக்க முடியும். . நல்லிணக்கம் மற்றும் ஸ்தீரமான அடித்தளம்இல்லாமல் நிலையான பொருளாதார அபிவிருத்தியை அடைவது சாத்தியமாகாத விடயமாகும். என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தின் போது சம்மாந்துறையில் நவீன பஸ்தரிப்பு நிலையத்தினை இவ்வருடத்தில் நிர்மாணித்து முடிக்க வேண்டும். இப்பஸ்தரிப்பு நிலையத்திற்கான பிரேரணையை பிரதேச சபை மூலம் முன்வைத்தல், அதற்கானசம்மாந்துறைப் பற்றுபலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினது காணியினை விரைவாக பெற்றுக்கொள்வதற்கென குழுவொன்று அமைக்கப்பட்டதுடன், ஐ திட்டத்தின் ஊடாக சம்மாந்துறை பஸார் வீதி அபிவிருத்தி செய்தல், காணிப்பிரச்சினை, நில அளவை,  கல்வி, சுகாதாரம், வீடமைப்பு , நீர்ப்பாசனம்,  விளையாட்டு மைதானம், வீதி, விவசாயம் போன்ற துறைகளின்  அபிவிருத்தி செய்வது சம்பந்தமான பிரச்சினைகள் இதன் போது ஆராயப்பட்டதுடன்,  முன்மொழிவுகளும் இடம்பெற்றன.

 கடந்த ஆண்டில்  மேற்கொள்ளப்பட்ட  பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு,  கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கிராமிய பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட689 வேலைத்திட்டங்கள் பற்றிய முன்னேற்றம் மற்றும் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன

இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல்.முஹம்மட் ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷீக், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஸார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், சம்மாந்தறை பிரதேச சபையின் செயலாளர் எம்.எம்.கே. முகம்மட், திணைக்களங்களின் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM