Web
Analytics
இன நல்லுறவை வளர்ப்பதில் மர்ஹீம் எம்.ஏ. அப்துல் மஜீதின் பங்கு அளப்பரியது ; மன்சூர் MP - Sri Lanka Muslim Congress

(எம்.சி. அன்சார்)

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதில் பெரும்பங்காற்றி வந்ததுடன், தமிழ் மக்களிடம் நெருக்கமான உறவை பேணி வந்தவர்தான் முன்னாள் அமைச்சர் மர்ஹீம் எம்.ஏ. அப்துல் மஜீத் ஆகும்.என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

அப்துல் மஜீத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் மர்ஹீம் எம்.ஏ. அப்துல் மஜீதின் ஆறாவது ஆண்டு நினைவு தின நிகழ்வும் மற்றும் அப்துல் மஜீத் ஞாபகார்த்த விருது வழங்கல் நிகழ்வும் நேற்றுமன்தினம் (26) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் அப்துல் மஜீத் பவுண்டேஷனின் தலைவரும், கிழக்கு மாகாண போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.முகம்மட் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – மிகுந்த நேர்மையும், அடிமட்ட மக்கள் தொடர்பும் அனைவருடன் அன்புடன் பழகும் பன்மைக்கொண்ட மறைந்த அப்துல் மஜீத் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மோதல்களும், பிரிவினைகளும் ஏற்பட்ட வேளை மனம் நொந்தவராக காணப்பட்டனர்.

அப்துல் மஜீத் அவர்கள் நேரடியாகத் தேசிய அரசியலில் நுழைந்தவர் அல்ல. முஸ்லிம்களைப் பெரும்பான்மைக் களமாக கொண்டு அரசியலுக்குள் வந்தவரும் அல்ல. அப்துல் மஜீதும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்த இடம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வீரமுனைக்கும், தமிழ்குறிக்கும் சொந்தமான இடமாகும். இந்த வீரமுனை மக்கள்தான் அவர் சேவையாற்றிய விதத்திதை அறிந்து அவர்களின் 1954ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டாரத் தேர்தலுக்கு அவரை நிறுத்தினர். இதன் மூலம் 1954, 1958 காலப்பகுதியில் சம்மாந்துறை  பட்டினசபைத் தலைவராக அப்துல் மஜீத் கடமையாற்றினார்.

பட்டினசபை மூலம் சம்மாந்துறைக்கு அயராது செவையாற்றி அவரை மக்கள் தேசிய அரசியலுக்கு அமைப்பு விடுத்தனர். 1960 – 1994ஆம் ஆண்டு வரை 34 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக பதவி வகித்த அவர் அரசாங்கத்தின் பிரதியமைச்சராகவும், அமைச்சராகவும் தொழிற்பட்மையும் மிகச் சாதாரணமான காரியமல்ல.

1980களில்  இனவாத ரீதியான ஆட்சியும், அழுத்தங்களும் எங்கள் மீது திணிக்கின்ற சூழ்நிலையில்தான் எமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள்1986ஆண்டு முஸ்லிம் சமூகத்தின் போராட்ட இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார்.  அக்காலப்பகுதியில் பெரும்பான்மைக் கட்சியின்  அமைச்சராக இருந்த அப்துல் மஜீத் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை ஆதரித்தார்.

 இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தையும் ஐக்கியத்துவத்தையும் வளர்ப்பதிலும் கட்டிக் காப்பதிலும் காத்திரமான பணிசெய்தவர் தான் மர்ஹும் அப்துல் மஜீத். இந்தத் தலைவனின்  ஆளுமை அரசியல் வாழ்வில் இன்றைய தலைமுறையினருக்குப்கற்றுக்கொள்ளக்கூடிய மகத்தான பாடமும் முன்மாதிரியும் அநேகம். 

இன்றைய அரசியலில் என்றுமில்லாத அளவு சிறுபான்மை சமுதாயங்கள் நெருக்கடியையும் ஆபத்துக்களையும்எதிர்நோக்கியிருக்கின்றன. இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு கருத்து வேறுபாடுகளுக்கப்பால், முஸ்லிம் சமுதாயமும், தமிழ்ச்சமுதாயமும் ஒன்றுபட்டு, ஒரே அரசியல் அணியிலேயே பயணிக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நல்லதொரு சந்தர்ப்பம் காத்துக் கொண்டிருப்பதால், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து சென்று இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற முன்வர வேண்டும்.

வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபோன்று அப்பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் பலமான ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் முதலில் தமக்கிடையே மனம் விட்டு உரையாட வேண்டும். வெறும் ஊடக அறிக்கைகளை விடுவதற்கும் பேட்டிகளை வழங்குவதற்குமாக இந்தச் சந்திப்புக்கள் இடம்பெறக் கூடாது. இந்த இரு சமூகங்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தையின் மூலமாகவும் அதிகாரப் பரவலாக்கலூடாகவும் நிரந்தரமான தீர்வுகளைக்காண வேண்டும்.

எனவே, தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைவதன் மூலமாகதான் வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளப் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM