நாட்டின் முஸ்லிம்களின் எதிர்காலத்தையும், இருப்பையும் தீர்மானிப்பதற்கான அரசியல் யாப்பிற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் தமது தனித்துவக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளதுடன், அத்துடன், முஸ்லிம்களின் பெரும்பான்மையான அனைத்து உள்ளுராட்சி மன்றங்களை யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்ற வேண்டும், அந்தச் செய்தியானது முஸ்லிம்களின் ஒரே குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நிரூபணம் செய்து அரசுக்கும், சர்வதேசத்துக்கும் உரத்துக் கூற வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.


எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு வெற்றிகொள்வது சம்பந்தமான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரின் இல்லத்தில் நேற்று இரவு (07) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – முஸ்லிம் காங்கிரஸ் எல்லாக் காலங்களிலும் மிகவும் நேர்த்தியாகவும், புத்திசாதுரியத்துடன் தனது காய்நகர்த்தலல்களை மேற்கொண்டு வருகின்ற இத்தருணத்தில் எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் முஸ்லிம்களின் தாய்க் கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை உடைப்பதற்குரிய முயற்சிகளில் பல்வேறு குழுக்கள் இடுபட்டு வருகின்றனர். பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கிய இப்பேரியக்கத்தை பலப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.


எதிர்வருகின்ற தேர்லானது பல்வேறு சவால்கள் நிறைந்த தேர்லாகும். எவ்வாறான சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து சபைகளையும் கைப்பற்ற வேண்டும். அதற்கு அனைத்து முஸ்லிம்களும் வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும்.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கைப்பற்றக்கூடாது எனும் நோக்கில் இன்று பல கட்சிகள்கூட்டிணைந்தும், பல சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கவுள்ளன. 


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். அதற்கு சிறந்த நபர்களை வேட்பாளர்களாக களமிறக்க உள்ளது. 


எனவே, இத் தேர்தலில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கப்பால் முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தைக் கடைப்பிடித்து நமது தேசிய விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸை அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெறச் செய்ய வேண்டும். என்றார்.


இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் வேட்பாளர்கள், உலமாக்கள், கட்சியின் முக்கியஸ்தவர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM