ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறக்காமம் மத்திய குழுத் தலைவரும் நீர்ப்பாசண திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தருமான எம். ஹாறூன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இறக்காமத்தில் விபத்துக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (15) செவ்வாய்க்கிழமை காலமானார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப காலம் முதலான போராளியாகிய அன்னாரின் மரணம் பேரிழப்பாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் வெளியிடப்படும் சாட்சியம் மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியர் நவாஸ் சௌபியின் மூத்த சகோதரரன அன்னார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் காலத்தில் கட்சியின் இறக்காம அமைப்பாளராக கடமையாற்றினார். கட்சியின் ஆரம்பம் முதல் இன்றுவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பயணத்திற்கு பக்கபலமாக செயற்பட்டு இக்கட்சியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் துணைபுரிந்தவராவார். இறக்காம மக்களை அன்போடும் ஆதரவோடும் அரவணைத்து அரசியல் வேறுபாடுகள் இன்றி எல்லோருடனும் சகஜமாக பழகி சேவையாற்றிவந்தார்.

இறக்காம மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த அந்நாரின் மறைவில் துயருரும் மனைவி மக்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை கொடுப்பதற்கும் அன்னார் செய்த நற்காரியங்களை ஏற்று பாவங்களை மன்னித்து அன்னாரின் கப்ரை விசாலமாக்கி, வெளிச்சமாக்கி சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக்கிக் கொடுப்பதற்கும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

எச்.எம்.எம்.ஹரீஸ் (பா.உ)
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்,
பிரதித் தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM