Web
Analytics
இலங்கை மேர்சன்ட் வங்கியின் நவீனமயப்படுத்தப்பட்ட ஹிங்குராகொட கிளை அலுவலக திறப்பு விழா - Sri Lanka Muslim Congress
(அகமட் எஸ். முகைடீன்)
 
இலங்கை மேர்சன்ட் வங்கியின் நவீனமயப்படுத்தப்பட்ட ஹிங்குராகொட கிளை அலுவலக திறப்பு விழா இன்று (21) வெள்ளிக்கிழமை வங்கிக் கிளை முகாமையாளர் சமிந்த வட்டேகொட தலைமையில் நடைபெற்றது.

 
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்ட்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து குறித்த வங்கிக் கிளை அலுவலகத்தை திறந்துவைத்து வங்கி நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்தார்.
 
மேலும் இந்நிகழ்வில் இலங்கை மேர்சன்ட் வங்கித் தலைவர் கலாநிதி சுஜீவ லொக்குஹெவா, பதில் தலைமை நிர்வாக அதிகாரி ஜூட் கமலத் உள்ளிட்ட இலங்கை மேர்சன்ட் வங்கி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், வங்கி வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
இலங்கை மேர்சன்ட் வங்கியின் ஹிங்குராகொட கிளை அலுவலகம் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இப்பிரதேச பொதுமக்களுக்கு தமது சேவையினை வழங்கிவந்தது. அவ்வங்கி தற்போது இடமாற்றப்பட்டு தற்கால யுகத்திற்கு ஏற்றவகையில் நவீனமயப்படுத்தப்பட்டு இலங்கை மேர்சன்ட் வங்கியின் சகல சேவைகளையும் வழங்கும் வகையில் புதுப் பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் இப்பிரதேச விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM