எமது பிரதேச இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் பாவனை போன்ற தீய விடயங்களைக் கட்டுப்படுத்த

சமூகத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என முன்னாள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

அல் உமர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் 2017.11.2017ஆந்திகதி – வெள்ளிகிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

 
அல் உமர் பாலர் பாடசாலையின் தலைவர் இர்ஷாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
 
தற்போது எமது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை போன்ற தீய விடயங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனைக் காணக்கூடியதாகவுள்ளது.
 
முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கின்ற எமது பிரதேசங்களில் இத்தகைய தீய விடயங்கள் அதிகரித்துச் செல்கின்றமையானது மிகவும் கவலைக்குரியதாகும்.
 
எமது இஸ்லாமிய மார்க்கமானது இத்தகைய போதைப்பொருள் போன்ற விடயங்களை முற்றாக தடை செய்துள்ளதுடன், இவ்வாறான விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையினையும் விடுத்துள்ளது.
 
இருப்பினும் எமது இளைஞர்களுக்கு மார்க்க ரீதியான முறையான வழிகாட்டுதல்களும், பின்பற்றுதல்களும் இன்மையே இத்தகைய தீய விடயங்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
 
எனவே போதைப் பொருள் பாவனை போன்ற தீய விடயங்களிலிருந்து தவிர்ந்து ஒழுக்கமிக்க சிறந்த இளைஞர் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு சிறுவயது முதலே எமது பிள்ளைகளுக்கு மார்க்க ரீதியான சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More