Web
Analytics
இளைஞர்கள் பொறுப்புடன் சமூக ஊடகங்களை கையாள வேண்டும் : எம்.ஐ.எம். மன்சூர் (பா.உ) - Sri Lanka Muslim Congress

எம்.சி. அன்சார்)

இன்றைய இளைஞர்கள் சமூக ஊடகங்களுடன் ஒன்றித்துப் போய் விட்டனர். அவர்கள் அதற்குள் மூழ்கிப் போகின்றவர்களாக இருக்கின்றனர்.  ஒவ்வொரு இளைஞர்களும், மாணவர்களும் இச்சமூக ஊடகங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு இனத்துக்கெதிரான ஒடுக்குமுறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது அது தொடர்பான கருத்துப் பரிமாறுகின்ற போது முறையான மொழியாள்கை அணுமுறைகளையும் கையாள வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தர்.

சம்மாந்துறை ஓய்வூதிரியர் நலன்புரி சமூக சேவைச் சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் இச்சபையின் சம்மாந்துறை காரியாலயத்தில் தலைவர் எம்.வை.எம். யாசீன் தலைமையில் நேற்று(18) இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – பொறுப்பற்ற முறையிலே ஒரு சிலர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள் அது சாதாரண கருத்தாக இருந்தாலும் ஒட்டு மொத்த முஸ்லிம்களுடைய கருத்தாகவே பார்க்கப்படுகின்றது.

இன்று சமூக வலைத்தளங்களும், இணையங்களும் ஆக்க வேலைகளுக்காக எந்தளவுக்குப் பயன்படுகின்றதோ, அதேயளவுக்கு அழிவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்று உதாரணமாக அண்மையில் ஏற்பட்ட கண்டிக் கலவரத்தினைக் கூறலாம்.

இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பும், செல்வாக்கும் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கியுள்ளதுடன்,  அது அழிவையும் ஏற்படுத்தும், உலகில் சமூக ஊடகங்களுக்குள்ள ஆற்றல் மிகவும் வலுவானது. முன்னைய காலத்தில் எந்த வகையிலும் சாத்தியப்படாத அளவிற்கு சமூக ஊடகங்கள் இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தில் ஊடுருவிக்காணப்படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்படுவதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்துள்ள அரசாங்கம் இன, மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுச்சால் உருவாகும் இனக்குரோதத்தையும், வன்முறைகளையும் ஒடுக்கக் காத்திரமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது அவசியமாகும்.

போதைவஸ்துகள் இன்று பல்வேறு வடிவங்களில் கவர்ச்சிகரமாக வெவ்வெறு வர்ணங்களில் பாடசாலைகளினுள்ளும் வரத் தொடங்கியுள்ளன. அதனுடைய ருசியைப் பதம் பார்த்தவர்கள் கூட அதற்கு இன்று அடிமையாகியுள்ளனர். அறிவை மயக்குகின்ற போதையை ஊட்டுகின்ற எந்த வஸ்துக்களையும் தொட்டுப்பார்ப்பதற்கு கூட நாங்கள் விளையக் கூடாது.

எனவே, இளைஞர் சமூகம் சமூக வலைத்தளங்களை முறையாகப்பயன்படுத்த வேண்டுவதோடு, நாம்போதை வஸ்து பாவணைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்காக சகல முயற்சிகளையும் பெற்றோர்களும், ஏனையோர்களும் மேற்கொள்ள வேண்டும். என்றார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார், சம்மாந்துறை நம்பிக்கையார் சபைத் தலைவர் எம்.எம். முஸ்தபா மற்றும்  ஓய்வூதிரியர் நலன்புரி சமூக சேவைச் சபையின் அங்கத்தவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM