Web
Analytics
இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட கழிவுத் தொட்டி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் முயற்சி. - Sri Lanka Muslim Congress
அகமட் எஸ்.முகைடீன்) 
 
இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தின் மல சல கூட கழிவுத் தொட்டி நிரம்பியதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில்

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (25) வியாழக்கிழமை குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் செய்து பார்வையிட்டு பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினார்.

குறித்த வீட்டுத்திட்டத்தின் மல சல கூட கழிவுத் தொட்டி நிரம்பியதனால் ஏற்பட்டுள்ள கசிவினால் அப்பிரதேசத்தில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பிரதேச வாசிகள் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து அப்பிரதேசத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் விஜயம் செய்தார்.
 
இஸ்லாமபாத் வீட்டுத்திட்டத்தின் மல சல கூட கழிவுத் தொட்டி சகல வீடுகளுக்கும் பொதுவானதாக காணப்படுவதாகவும் அவ்வாறில்லாமல் மூன்று வீடுகளுக்கு ஒரு கழிவுத்தொட்டி என்றவகையில் தனித் தனியான கழிவுத் தொட்டிகளை அமைத்துத் தருமாறும் அதனால் கழிவுத் தொட்டிகளை பராமரிப்புச் செய்வது இலகுவாக அமையும் எனவும் பிரதேச வாசிகள் இதன்போது தெரிவித்தனர். அல்லது குறித்த மல சல கழிவுகளை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான திட்டமொன்றை செயற்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
 
பிரதேசவாசிகள் இக்கோரிக்கையினை அமுல்படுத்துவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் குறித்த விடயம் தொடர்பான நிபுணர்கள் குழுவுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM