Web
Analytics
உதிர்க்கும் துளிர்க்கும் மரம் இனியும் போராடும் - Sri Lanka Muslim Congress

யாருமே வெல்லவில்லை 
எல்லோருமே தோற்றிருக்கிறோம்

நம்மை நாமே காட்டிக் கொடுத்திருக்கிறோம் 
நம்மில் சிலர் கூட்டிக் கொடுத்திருக்கிறார்கள் 
நானா நீயா என்று போட்டியிட்டு 
நெருப்பில் விழுந்திருக்கின்றோம்

மரம் வளர்க்க வந்து 
பணம் பறிக்கப் போனவர்கள் எல்லாம் 
உயிர் கொடுத்து மரம் வளர்த்த 
உண்மைகள் அறியாதது வியப்பில்லை 
பிணம் பொறுக்கி அடக்கி விட்டு 
உணர்வு கொண்ட போராளிகளும் 
நோயாளி வேஷம் கொண்டு 
பணத்தை பரிகாரமாக்கியது வியப்புத்தான் 🤔

பணம் காய்க்கா மரம் என்று 
ஏமாந்த அணில்களெல்லாம் 
மரம் விட்டு தாவினால் 
மரம்தான் மாயுமோ

பருவம் மாறும் போது 
உதிர்க்கும் துளிர்க்கும்
மரத்துக்கு இது புதிதல்ல

இடி தாங்கும் மரத்துக்கு 
இலையுதிர்வது மயிர் இழிவது

கண்ணைக் கொடு 
ஓவியம் தருகின்றேன் என்றவனிடம் 
போ வராதே என்றிருக்கிறது மரம் 
கண்ணைக் கொடுத்து வாங்கிய ஓவியங்களை 
கனீமத் என்று சொல்லும் மனிதர்களின் 
விற்கப்பட்ட கண்களுக்காய் 
உதிர்க்கும் துளிர்க்கும்
மரம் இனியும் போராடும்

ஓன்று சொல்கிறேன் …
மரம் வாழும் …

Ranoos Muhammath Ismail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM