உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள பல அங்கத்துவர் தொகுதிகளில் சிறுபான்மை இன உறுப்பினர்களை உள்வாங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்பித்த பிரேரணையை அரசு நிராகரித்துள்ளது.

 
பாராளுமன்றத்தில் சனியன்று நிறைவேற்றபட்ட உள்ளூராட்சித் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான பிரேரணையின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்பித்த இந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காது சபையில் இருந்து வெளியேறினர். அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
 
அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதோடு தமது முன்மொழிவுகளை இணைத்துக்கொள்ளுமாரும் இல்லையேல் எதிர்த்து வாக்களிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 
 
இதனையடுத்து பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, குறைபாடுகள் காணபடுகின்றமையை ஏற்றுகொண்ட போதும் தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் குறைபாடுகளை பின்னர் கலந்து பேசிவோம் இப்போதைக்கு சட்ட மூலத்தினை ஆதரியுங்கள் என்று கோரினார். 
 
அரசு சமர்பித்த திருத்தப்படி வெற்றி பெரும் கட்சிக்கோ, குழுவுக்கோ சகல உறுப்பினர்களும் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது.
 
சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு உருவாக்கப்பட்ட பல அங்கத்தவர்கள் தொகுதி முறையில் சிறுபான்மையினருக்கு இடமளிக்கப்படாத நிலை உருவாகியிருப்பது குறித்து சிறுபான்மை கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM