நாம் அரசியல் பயணத்தில் தடம்பதித்த காலம் தொட்டு இன்று வரைக்கும் எமது சமூகத்திற்க்கான அரசியல் பணியைதான் முன்னெடுத்து வருகின்றோம். என வடமேல் மாகாணசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா பிரதான அமைப்பாளருமான றிஸ்வி ஜவ்ஹர்ஷா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் எமது 15 வருட கால அரசியல் பணியானது சமூகத்தின் உரிமை மற்றும் அபிவிருத்திசார்ந்த விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளோம்.

உரிமையோடு தொடர்புடைய விடயங்களில் சமூகம் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்த சந்தர்ப்பங்களில் போது எம்மால் முடியுமான விதத்தில் அதற்க்கான குரலை மாகாணசபையில் எழுப்பியுள்ளோம். மாற்றமாக எம்மை சமூக அக்கறை இல்லாதாவர்கள் என்று மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிப்பவர்கள் எமது பணிகளை அவதானித்து பார்க்க வேண்டும்.

மேலும் குருநாகல் மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி பணிகளை இறைவன் உதவியால் கொண்டு சேர்ப்பதில் பல்வேறுபட்ட ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளோம். நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ஆனது முதல் அவரின் ஒத்துழைப்புடன் பல கோடி ரூபாய்களை சமூகத்தின் அபிவிருத்திற்க்காக பயன்படுத்தி வருவதை நீங்கள் அவதானிப்பீர்கள். மக்களின் போக்குவரத்திற்க்கு பெரிதும் கஷ்டங்களாக காணப்பட்டு வந்த வீதிகள், குடிநீர் பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்த பிரதேசங்களுக்கு பாரிய குடிநீர் திட்டங்கள் வழங்கப்பட்டமை என்பன பெறும் சான்றாக அமைவதை அவதானிக்கலாம். எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாம் மிக முக்கியமான ஊரின் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் வென்றெடுக்கின்ற ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ளோம்.

எனவே இத்தேர்தலை முறையாக பயன்படுத்த வேண்டிய கடமை இருக்கின்றது. அறிவு, ஆற்றல், தன்நம்பிக்கை மிக்க பிரதிநிதிகள் உங்களது பிரதேசத்தில் இருந்து பிரதேசசபைகளுக்கு செல்ல வேண்டும். என்பதை ஆழமாக புரிந்து கொண்டு பெறுமதிமிக்க வாக்குகள் பயன்படுத்தப்பட வேண்டும். சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம் அவர்கள் தாம் பிரதேசம் சார்ந்த விடயங்களில் உரிய முறையில் குரல் கொடுக்ககூடியவர்களாக இருப்பார்கள். எனவே தேர்தலை சாதகமான விதத்தில் எதிர்கொள்வதே சிறந்த அம்சங்களை முன்னெடுக்க வழிவகுக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More