மூதூர் பிராந்தியத்தில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களின் நீண்டகாலத் தேவையாகவும், பிரச்சினையாகவும் இருந்து வந்த மூதூர் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)க்கான மாணவர் விடுதி (Boys Hostel)அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின்  அயராத முயற்சியின் பயனாக இன்று (07) வெள்ளிக்கிழமை மத்திய கல்வி அமைச்சர்  அகிலவிராஜ் காரியவசத்தினை கல்வி அமைச்சில் நேரடியாக சந்தித்த கலந்துரையாடிய வேளை,பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு விடுதியின் தேவைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்த வேளையில் தேவையை உணர்ந்த அமைச்சர் எனது வேண்டுகோளினை ஏற்று 2017 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் சுமார் 04 கோடி 76 இலச்சம் ஒதுக்கீட்டுக்கான அனுமதியினை வழங்கியுள்ளார்.

அதேவேலை இவ்வேலைத்திட்டம் உரிய முறைப்படி நடைமுறைப்படுத்தவும்,செயற்படுத்தவும் கிழக்கு மாகாண பாடசாலை வேலைகளுக்கான பணிப்பாளர் கேள்வி அறிவித்தல் கோரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இச் செயற்றிட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபடவும்,பாடசாலை புறக்கீர்த்தி செயற்பாடுகளை உரிய காலத்தில் நிறைவேற்றவும், மேலதிக நேரத்தை கற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் நல்லதொரு சூழல் இதன்மூலம் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM