Web
Analytics
எம்.எஸ்.தௌபீக் அவர்கள் முயற்சியினால் புல்மோட்டை சட்டவிரோத குடியேற்றம் உடன்நிறுத்து - Sri Lanka Muslim Congress

புல்மோட்டை 14ம் கட்டை காணி விடயமாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் ஜனாதிபதியின் செயலாளரோடு தொடர்புகொண்டு இன்று (10) காலை மணியளவில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குச்சவெளி பிரதேச செயலாளருக்கு காணி குறித்த சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட எமது தலைவர் கட்சியின் பிரமுகர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமயை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது இன்ஷா அல்லாஹ் விரைவில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் ஏற்பாட்டில் விரைவில் ஆளுநர் அலுவலக்தில் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர், காணி ஆணையாளர் உள்ளிட்ட பிரமுகர்களோடு விசேட கூட்டமும் இடம்பெற இருக்கின்றது இதற்காக நடவடிக்கை எடுத்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களுக்கு நன்றியை எமது பிரதேச மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM