ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.ஐ.எம் மன்சூர் அவர்களின் முயற்சியின் பயனாக சம்மாந்துறை ஹிஜ்ரா 2ஆம் வீதி தார் வீதியாக மாற்றப்படுகிறது..

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் பிரதேச சபை தவிசாளராக இருந்த காலந்தில் புனர் நிர்மானம் செய்யப்பட்டிருந்த சம்மாந்துறை ஹிஜ்ரா 2ஆம் வீதியானது (மதீனா உம்மா வீதி- புளக் ஜே கிழக்கு) அதன் பின்னர் எந்தவொரு புனர் நிர்மானமும் செய்யப்படவில்லை என்பதோடு பாராளுமன்ற உறுப்பினராக தான் தெரிவு செய்யப்பட்ட போது பா.உ மன்சூரினால் அப்பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிக்கமைய இவ்வீதி துரித கதியில் புதிய வீதியாக புனர் நிர்மானம் செய்யப்படுகிறது..

இவ்வீதி அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அப்பிரதேசவாசிகளோடு சந்தித்துத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது..

Image may contain: one or more people, tree, plant, shoes, outdoor and nature

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM