Web
Analytics
எம்.ஐ.எம்.மன்சூர் எம் பி வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தி! - Sri Lanka Muslim Congress

இலங்கையிலும், உலக நாடுகளிலும் பரந்து வாழும் எமது முஸ்லிம் உறவுகளுக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;  புகழுக்கும் புண்ணியத்திற்கும் உரிய புனித ரமழான் மாதத்தை இவ்வருடமும் அடையக்கூடியநற்பாக்கியத்தைப் பெற்ற நாம், கடமையை நிறைவேற்றிய களிப்புடன் அல்லாஹ் நமக்கு வழங்கிய பரிசாக “ஈதுல் பித்ர்” இனிய பெருநாளை இன்றுகொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

 உள்நாட்டிலும், இஸ்லாமிய, அரபு  நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம் சமூகம் அனுபவித்து வரும் இன்னல்களுக்கு மத்தியில் மீண்டும் ஓர் ‘ஈதுல் பித்ர்’  பெருநாளை சந்திக்கிறோம். இந்த அவலங்களில் இருந்தும், துன்ப துயரங்களில் இருந்தும் மீள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்இத்தினத்தில் இறைஞ்சுவோமாக!

இன்று மேற்கத்திய நாடுகளின் சதி வலைக்குள் சிக்கி பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், எகிப்து, சிரியா, ஈராக், லிபியா  போன்ற முஸ்லிம் நாடுகளிலும்,மியன்மார் போன்ற நாடுகளிலும் வசிக்கும் அப்பாவி முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்படும் படுபாதகச் செயல் நாளாந்தம் தொடர்ந்த வண்ணம்இருக்கின்றதோடு, குறிப்பாக பலஸ்தீன மக்கள் சொந்த மண்ணில் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களின் சபீட்சத்திற்காகவும், விமோசனத்திற்காகவும் முழு உலகமும் மனித நேய அடிப்படையில் உழைக்க வேண்டும்.

 முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செயற்படுவதன் காரணமாக தேசிய, சர்வதேச மட்டத்தில் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம். பல அரபுமுஸ்லிம் நாடுகள் இன்று மேற்குல சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன. இஸ்லாம் மார்க்கத்தின் எழுச்சியைத் தடுப்பதற்காக பாரியசூழ்ச்சித்திட்டங்களை அந்த சக்திகள் அரங்கேற்றி வருகின்றன.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ள சூழலில் முஸ்லிம்கள் பொறுமையோடும்நிதானமாகவும் செயற்பட வேண்டும்.

இவ்வாறான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு இப்பெருநாள் தினத்தில் சமூக ஒற்றுமையும், எமது அரசியல்பலத்தையும் மேலும் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளை முன்னெடுக்க உறுதி பூணுவதுடன், இறைவனிடம் இருகரமேந்திப்பிரார்த்திப்போம்.

எனவே, புனித ரமழான் மாதத்தில் பெற்றுக்கொண்ட ஆத்மீக, லௌகீக பயிற்சிகளையும், உணர்வுகளையும் தொடர்ந்தும் நாம் கடைபிடிப்பதன் மூலமேஅதன் நெறி தங்கியுள்ளது.

மீண்டுமொருமுறை, அனைவருக்கும் எனது இனிய “ ஈத் பிர்த்” நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM