Web
Analytics
எம்.பி.எச். முஹம்மட் அவர்களின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்போம் - Sri Lanka Muslim Congress

ஓய்வு பெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.எச். முஹம்மட் காலமானார். இன்னலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

அன்னார் வலய கல்விப் பணிப்பாளராக இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காய் அர்பணிப்புடன் சேவையாற்றினார். இப்பணிக்கு முன்னராக ஆங்கில ஆசிரியர்கள் அரிதாக காணப்பட்ட அக்காலத்தில் தலை சிறந்த ஆங்கில ஆசிரியராக திகழ்ந்தார்.

அத்தோடு குறிப்பிட்ட சில வருடங்கள் எனது செயலாளராக மக்கள் பணி செய்தார். பிறரின் மனம் நோகாத வண்ணம் செயற்பட்டு எல்லோருடனும் சிறந்த உறவைப் பேணக்கூடிய ஒருவராக காணப்பட்டார்.

அன்னாரின் மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை கொடுப்பதற்கும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளவ்ஸ் என்னும் உயர்வான சுவர்க்கத்தை அருளுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் (பா.உ)
அரச தொழில் முயற்ச்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM