விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட, புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு திறப்பு விழாவுடனான வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் என்.எம். ஸாபி தலைமையில் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக், புத்தளம் வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. அஸ்கா, ஓய்வு பெற்ற அதிபர்களான எம்.சி.எம். ஜுனைட், மௌலவி எம்.எம். அமானுல்லாஹ், எரிக்கலம்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். சபூர்டீன் உள்ளிட்ட உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஹும் நூர்தீன் மசூரினால் புத்தளத்தில் எருக்கலம்பிட்டி கிராமம் உள்ளிட்ட இப்பாடசாலை உருவாக்கப்பட்டது. இதனை நினைவு கூறும்வகையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இப்பார்வையாளர் அரங்கிற்கு நூர்தீன் மசூரின் பெயர் சூட்டப்பட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

குறுகிய காலத்தில் மிகப் பெரும் சாதனைகளை படைத்துள்ள இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றிவரும் அதிபரினை கௌரவப்படுத்தும் வகையில் அவரின் கோரிக்கைகளை ஏற்ற விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் இப்பாடசாலையின் மைதானத்திற்கான சுற்றுமதில் அமைத்தல் மற்றும் மைதானத்தை செப்பனிடல் போன்றவற்றிற்கு நிதிகளை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்ததோடு இப்பாடசாலைக்கு கடின பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் அதற்கான பயிற்றுவிப்பாளரை நியமிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மற்றும் க.பொ.த சாதாரன தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட கல்வி, புறக்கீர்த்திய செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

இதன்போது, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

– ஊடகப் பிரிவு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM