ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஏறாவூர் பிதேசத்தின் உள்ளக வீதிகள் தார் வீதிகளுக்கான புனரமைப்பு வேலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு (05.11) ஞாயிற்றுக்கிழமை முன்னால் அதிபர் MBM.சக்கூர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது புன்னக்குடா குறுக்கு வீதிகள்,புதிய சந்தை குறுக்கு வீதிகள், ஜிப்ரி தைக்கா குறுக்கு வீதிகள், காந்தியார் குறுக்கு வீதிகள், புகையிரத நிலைய குறுக்கு வீதிகள், மௌலானா குறுக்கு வீதிகள் உள்ளடங்களாக 32 வீதிகளுக்கான அபிவிருத்திப்பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன் ஆரம்ப நிகழ்வுகளில் முன்னால் நகர சபையின் தவிசாளர் MIM.தஸ்லிம் சாலி, ஹாஜியார் பவுண்டேசன் இஸ்தாபகர் SM.நளீம், ஏறாவூர் உப தபாலகத்தின் தபால் அதிபர் AM.நஸீர், நகர சபையின் வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிட எதிர்பார்த்துள்ள IL.யஹியா மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More