Web
Analytics
ஏறாவூர் தாமரைக்கேனி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் கையளிப்பு  - Sri Lanka Muslim Congress

ஏறாவூர் தாமரைக்கேனி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டங்களை கையளிக்கும் வைபவம் நேற்று பாடசாலை அதிபர் மஹ்தூம் மரைக்கார் தலைமையில் இடம்பெற்றது.

இதில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்,

பிரதியமைச்சர் அவர்களின் முயற்சியில் மிக அத்தியாவசியமாக இருந்த சுற்றுமதில் அமைக்கும் பணி 15 இலட்சம் ரூபாய் நிதியில் முழுமைப்படுத்தப்பட்டதுடன், பிரதியமைச்சரின் வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில் இருந்து பாடசாலையின் முகப்பில் நிர்மாணிக்கப்பட்ட வரவேற்பு நுழைவாயிலும் வைபவரீதியாக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது அந்நூர் சமூக சேவை நிதியத்தின் தலைவர் செய்யட் அஹமட் அலியார், முன்னாள் நகர முதல்வர் தஸ்லீம், பிரதியமைச்சரின் சகோதரர் செய்யட் அஹமட் ஸாஹிர் மௌலானா, பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான முன்னாள் அதிபர்கள் சயீட், மற்றும் சக்கூர்,, ரூகம் அதிபர் கஸ்ஸாலி சாஹிப் , இப்திகார் மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM